தோனியின் ஓய்வு குறித்து பிசிசிஐ தேர்வு குழு ஆலோசனை

மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து பிசிசிஐ தேர்வு குழுவிடம் ஆலோசனை நடத்த இருப்பதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

நட்சத்திர வீரரான எம்எஸ் தோனி உலகக் கோப்பைக்குப் பிறகு தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஓய்வை அறிவிக்காத தோனி, அதன் பின்னர் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

இதனிடையே பிசிசிஐ-ன் புதிய தலைவராகத் தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலி, இது குறித்து ஆலோசிக்க உள்ளார்.

அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும் தேர்வு குழு கூட்டத்தில் தோனியின் ஓய்வு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே