திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு..

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை சோதனையிட மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு தடை கோரிய முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அந்தத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் அவரது சென்னை வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் சோதனையிட போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

நோட்டீசுக்கு தடை கோரி நீதிபதி ஆதிகேசவலு முன் செந்தில் பாலாஜி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

ஆனால் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, தொடர்புடைய நீதிமன்ற அமர்வை  நாடி நிவாரணம் பெற அறிவுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே