நடிகர் சங்கத்துக்கு ஸ்டாலின் அழைப்பு!

குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து சென்னையில் நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்க தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து, வரும் 23ஆம் தேதி சென்னையில் திமுக கூட்டணி சார்பில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க நடிகர்கள் உறுப்பினர்களாக இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

சாதி, மதம், மாநில பாகுபாடுகள் கடந்து இப்போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக இச்சட்டத்தை திரும்பப் பெற வைக்க முடியும் என்றும் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடக்கும் இப்பேரணியில் திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கமும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே