டெல்லி ஜூம்மா மசூதி முன்பு ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதி முன்பு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியில் நாள்தோறும் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி செல்ல திட்டமிடப்பட்டது.

Thousands protest in front of Delhi Jama Mosque

பீம் ராணுவ அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தலைமையில் இந்த பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

இதனிடையே ஜூம்மா மசூதியில் தொழுகை முடிந்த பின்னர், அவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

பீம் ராணுவ அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தும் அங்கு உள்ளார். அவர்களை வெளியே வராமல் தடுக்க போலீசார் தயார் நிலையில் உள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே