பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், யோசிச்சு ஓட்டுப் போடுங்க, பிறகு வருதப்படாதீங்க எனக் குறிப்பிட்டுள்ளார்.

சின்னத்திரை உலகில் கோடிக்கணக்கான மக்கள் கண்டு களிக்கும் நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று.

நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய போட்டியாளர்களுடன் கடந்த வாரம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் இல்லத்தின் கேப்டன்ஷிப் தேர்வு செய்யும் காட்சிகள் இன்று ஒளிப்பரப்பாக உள்ளன. போட்டியாளர்களில் ஒருவர் பிக் பாஸ் இல்லத்திற்கு கேப்டனாக வருவார் எனத் தெரிகிறது. 

இதற்கான ஓட்டெடுப்பு போட்டியாளர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக போட்டியாளர்களுக்கு அறிவுரை வழங்குவது போல் மக்களுக்கும் தமது அறிவுரையை அள்ளி வீசியிருக்கிறார் கமல்.

‘ஓட்டுப்போடுவதற்கு முன்பே யோசித்துக்கொள்ளுங்க, ஓட்டுப்போட்ட பிறகு வருதப்படாதீங்க’ என கமல் பொடி வைத்து பேசியிருக்கிறார்.

இதனிடையே தாம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் கமல் கண் சிமிட்டியுள்ளார்.

பைசா செலவில்லாமல் தனது கருத்தை கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நல் வாய்ப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொள்கிறார் கமல்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பிக் பாஸ் மூலம் தனது அரசியல் பேஸை வலிமையாக கட்டமைத்துக் கொள்கிறார்.

பிக் பாஸ் தொடங்கப்பட்ட ஒரு வாரத்திலேயே கமலிடம் இருந்து இத்தகைய கருத்து வருகிறதென்றால் இன்னும் போகப் போக மக்கள் நீதி மய்யத்தை மக்கள் மனதில் மையம் கொள்ளச் செய்துவிடுவார் போல் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே