போலீசாரின் தாக்குதல்களை சமாளிக்க போராட்டத்தில் ஈடுபடும் மாணவிகள் கையாளும் டெக்னிக் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வன்முறையை கட்டுபடுத்த காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடைய அவ்வப்போது தடியடிகள் நடத்தப்பட்டது.
டெல்லியில் ஜாமியா மாணவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடினர். அவர்கள் மீதான போலீசாரின் காட்டு மிராண்டி தாக்குதல் விமர்சனத்தை எழுப்பியது.
மாணவர்கள் டெல்லி போலீசார் நடவடிக்கையை கண்டித்தனர். இனி இதுபோன்ற ஒரு நிலைமையை எதிர்கொள்ள வியூகம் ஒன்றை அமைத்தனர்.
போராட்டத்தின் போது, போலீசார் அருகில் வந்தால் மாணவிகள் ரோஜா பூக்களை தந்து அகம் மகிழ்கின்றனர். போலீசாரை அவர்கள் பாராட்டுகின்றனர்.
அதை கண்டுகொள்ளாமல் போலீசார் முன்னேறினால் ஒன்றுகூடி தேசிய கீதத்தை பாடுகின்றனர். உடனே போலீசாரும் அப்படியே நின்று விடுகின்றனர். மாணவர்களின் இந்த புதுயுக டெக்னிக்கை கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் திணறுகின்றனர்.