ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஸ்டாலின், மோடி வாழ்த்து…!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடிகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெகன்மோகன் ரெட்டி, ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ பிரார்த்திக்கிறேன் என்று மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதேப்போல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஆந்திர மக்களுக்கும், நாட்டிற்கும் இன்னும் பல ஆண்டுகள் ஜெகன்மோகன் ரெட்டி சேவை புரிய வாழ்த்துகிறேன் என ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே