BREAKING : உயிரே போனாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் : புதுச்சேரி முதல்வர்

உயிரே போனாலும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை புதுச்சேரியில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மாணவர் அமைப்புகள் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் அனைத்து இஸ்லாமிய ஜமாத்தார்கள் ஒன்றிணைந்து சி மில் அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய முதல் அமைச்சர் நாராயணசாமி நாட்டில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், அதனை எல்லாம் திசை திருப்பும் நோக்கில் அவசர அவசரமாக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இதை தொடர்ந்து பேசிய அவர்,

  • உயிரே போனாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்றும்;
  • எங்கள் பிணத்தின் மீது ஏறி நின்றாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்றும்;
  • ஆட்சியை இழந்தாலும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை புதுச்சேரியில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும்;
  • என் உயிரே போனாலும் சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்போம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சூளுரைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே