சாத்தக்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ.பால்துரை கொரோனவால் உயிரிழப்பு!!

சாத்தக்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ.பால்துரை கொரோனவால் உயிரிழந்தார்.

ஏற்கனவே சர்க்கரை நோய் காரணமாக ஜூலை 7ம் தேதி தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கைது செய்யப்பட்டிருந்தார். மதுரை மத்திய சிறையில் இருந்த நிலையில் கடந்த 24ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

அவரது மனைவி மங்கையர் திலகம் தமது கணவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இந்நிலையில் பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே தமது கணவருக்கும் வழக்கிற்கும் தொடர்பு இல்லை என அறிவிக்கும் வரை உடலை பெறப்போவதில்லை என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே