ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தங்கத் தேரோட்டம்: ஆண்டாள் கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) ஆடிப்பூர தங்கத் தேரோட்டம் பக்தர்களின்றி நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு அனைத்து வழிபாட்டு தலங்களும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பூட்டப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு முக்கிய கோவில்களில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது.

மேலும் இக்கோவிலில் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்துள்ளது. 

ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திரம் ஆண்டாள் பிறந்த தினமாகும். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்கத் தேரோட்டம் நடைபெறும்.

ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா ஆடிமாத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று வெகுவிமர்சையாக தேரோட்டம் நடைபெறும்.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். 9 நாள்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் ஆண்டாளை தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றின் காரணமாக இதுவரை எந்த ஆண்டும் இல்லாத நிலையில் பக்தர்களின்றி இக்கோவில் விழாக்கள் நடைபெறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பெரிய தோரோட்டத்திற்க்கு பதிலாக கோவில் வளாகத்திற்குள் தங்க தேரோட்டம் பக்தர்களின்றி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பின்னர் 9 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை பூரம் நட்சத்திரத்தில் அதிகாலையில் இருந்து ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் இன்றி ஒரு சில அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டு 9 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை கோவில் வளாகத்திற்க்குள் தங்க தேர் இழுக்கும் திருவிழா நடைபெற்றது.

தேரோட்டத்தை இணை ஆணையர் முனைவர் தனபால், ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், ஆகியோர் வடத்தை பிடித்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சடகோப ராமானுஜ ஜீயர்,தென் மண்டல ஐஜி முருகன் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா விருதுநகர் மாவட்டஅறங்காவலர் குழு தலைவர் பலராமன் சார் ஆட்சியர் தினேஷ்குமார்,

வட்டாட்சியர் சரவணன், வருவாய் ஆய்வாளர் பால்துரை, கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் முத்தையா,வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் சிந்து முருகன், அதிமுக நிர்வாகி மயில்சாமி மாவட்ட கவுன்சிலர் கணேசன், மற்றும் தைலாகுளம் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே