புகழ்பெற்ற ஆற்றுத்திருவிழா: 2 லட்சம் பக்தர்கள் வருகை

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில், பொங்கல் முடிந்து 5-வது நாளில், நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் பேரங்கியூர், பிடாகம், சின்னக்கல்லிப்பட்டு, அரகண்டநல்லூர், கலிஞ்சிக்குப்பம், வீடூர் அணை ஆகிய இடங்களில் ஆற்றுத் திருவிழா நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களைச் சேர்ந்த உற்சவர் சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்றனர்.

ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில், திருவண்ணாமலை அண்ணாமலையார், திருவரங்கம் ரங்கநாதர், கீழையூர் வீரட்டேஸ்வரர் போன்ற சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கடலூர் தென்பெண்ணை ஆற்றுத் திருவிழாவில், கடலூரை சுற்றி உள்ள பல கிராமங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த பாகூர், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள், மஞ்சக்குப்பம் ஆள்பேட்டை அருகே தெண்பெண்ணை ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே