மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு..!!

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று(நவ.,15) நடை திறக்கப்பட்டது.

பக்தர்களின் பாதுகாப்புக்காக கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தில் ஒரு நாளுக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள். முக கவசம் அணிவது கட்டாயம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு இல்லை என்பதற்கான பரிசோதனை சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

கடந்த 24 மணி நேரத்திற்கு முன்னர் இந்த சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

பம்பை மணிலை ஆறுகளில் குளிக்கவும், சபரிமலை தவிர்த்து இதர கோவில்களில் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே