கொரோனா மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் திடீரென சாலையில் இறங்கி போராட்டம்

காஞ்சிபுரம் அருகே கொரோனா மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் திடீரென சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாங்காடு மருத்துவக்கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சுடுதண்ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை எனக்கூறி தனிமைப்படுத்தப்பட்ட 50 க்கும் மேற்பட்டோர் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூக இடைவெளியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அடிப்படை வசதி செய்து தராமல் உள்ளே செல்ல மாட்டோம் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாங்காடு காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே