இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் ஜனவரி 9ந் தேதி நிறைவடைவதால் புதிய அதிபரைத் தேர்வு செய்ய நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே பொதுஜன பெரமுனா கட்சி சார்பிலும், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் கோத்தபய, சஜித் இடையேதான் அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
இத்தேர்தலில் கோத்தபய வெற்றிபெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.