திமுக மாணவரணி சார்பில் ஐஐடி வாயிலில் போராட்டம்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவை சேர்ந்த பாத்திமா லதீப் என்ற மாணவி கடந்த 9ஆம் தேதி சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார்.

மதரீதியாக பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மாணவியர் செல்போனில் குறிப்புகள் இருந்ததாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாணவியின் தற்கொலைக்கு நீதிகேட்டு திமுக மாணவரணி சார்பில் சென்னை ஐஐடி வாயிலில் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே