அதிமுக தலைமையில்தான் கூட்டணி – முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..!!

அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். அதனை ஏற்பவர்களே கூட்டணியில் இருப்பார்கள் என முதல்வர் பழனிசாமி கூறி உள்ளார்.

தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார முன்னெடுப்புகளை ஒவ்வொரு கட்சியும் மேற்கொண்டு வருகிறது.

அதேபோல அதிமுக தலைமையும் பிரச்சாரங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. திருச்சியில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். அதை ஏற்பவர்கள் மட்டுமே அதிமுக கூட்டணியில் இருப்பார்கள். மக்களவைத் தேர்தலின்போது கூட்டணியில் இருந்த அதே கட்சிகள் தற்போதும் கூட்டணியில் நீடிக்கிறது.

சிறையிலிருந்து சசிகலா வெளியேவந்தாலும் அரசியலில் மாற்றம் இருக்காது. உட்கட்சிப் பூசல் என்பது அதிமுகவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறது. மார்ச் மாதம் தேர்தல் தேதியை அறிவித்துவிடுவார்கள் என்பதால் தேர்தலுக்கான நாட்கள் குறைவாகவே உள்ளது” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே