தமிழக மீனவர்களின் 94 படகுகளை அழிப்பதற்கு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க நுழைந்ததாக கூறி அந்நாட்டு கடற்படையினர் கைது செய்து  சிறையில் அடைப்பதும், தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் நடைபெற்று வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கை மீன்பிடி துறைமுகங்கள் அருகே உள்ள பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நீண்ட  நாட்களாக பராமரிப்பு இன்றி இருப்பதால் பல விசைப் படகுகள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

படகுகளை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழக மீனவர்கள் படகுகளால் கடற்கரை மாசடைவதாகவும், இலங்கை மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாகவும் புகார்  தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையில் தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்திருந்த 121 படகுகளில் 94 படகுகளை அழிப்பதற்கு ஊர்காவற்றுறை  நீதிமன்றம் மற்றும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் 88 படகுகள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை நீதிமன்றத்தில் இந்த உத்தரவு தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே