நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.
இதுவரை 90927 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். 53949 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதே போல, 34,109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் மத்திய அரசு தொடர்ந்து பலகட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன்படி மத்திய அரசு அறிவித்திருந்த பொது முடக்கம் இன்றுடன் நிறைவடைவதை அடுத்து, பொது முடக்கத்தை மே 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு தகுந்தவாறு பல கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஊரடங்கு குறித்து அறிவிப்பதற்கு முன்னர் மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.