துளசேந்திரபுரம் கிராம மக்கள் ரங்கோலி கோலமிட்டு கமலா ஹாரிஸூக்கு வாழ்த்து..!! (படங்கள்)

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்று கமலா ஹாரிஸ் துணை அதிபராக உள்ளதை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அவரது சொந்த ஊர் மக்கள், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் தாய் ஷ்யாமளா கோபாலன் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபும் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவர் அமெரிக்காவிற்கு சென்றபோது, ஜமைக்கா நாட்டை சார்ந்த ஹாரிஸை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் துணை அதிபராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெற துளசேந்திரபுரம் கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனால், துளசேந்திரபுரம் கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், தங்கள் வீடுகள் முன் பெண்கள் கோலங்களை போட்டும் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். 

பெண்கள் போட்ட கோலத்தில் வணக்கம் அமெரிக்கா என இருந்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே