சிறைக் கைதி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..!!

செல்வமுருகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கியது.

விருத்தாச்சலம் குற்றவியல் நடுவர் ஆனந்த் நேற்று கிளைச் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். பண்ருட்டியை சேர்ந்த செல்வமுருகன்(40) சங்கிலி பறிப்பு வழக்கில் நவம்பர் 2ம் தேதி கைது செய்யப்பட்டார்.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நவ.4ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தன கணவரை போலீஸ் பொய் வழக்கில் கைது செய்து சித்ரவதைக்கு உட்படுத்தியதாக மனைவி, எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, விழுப்புரம் மருத்துவமனையில் உள்ள செல்வமுருகனின் உடலை வாங்க 4-வது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே