ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் துபையில் நடைபெறும் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
கடந்த ஆட்டத்தில் ஜொலித்த ஜானி பேர்ஸ்டோவ் இந்த முறை சரியான தொடக்கத்தை அளிக்கவில்லை.
அவர் 19 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு, வார்னருடன் மணீஷ் பாண்டே இணைந்தார்.
ரன் ரேட் பெரிதளவில் உயராத போதிலும் இருவரும் விக்கெட்டைப் பாதுகாத்து விளையாடி வந்தனர்.
2-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 48 ரன்களுக்கு ஆர்ச்சப் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, மணிஷ் பாண்டே ஓரளவு துரிதம் காட்டி சிக்ஸரும் பவுண்டரியுமாக அடித்தார்.
இதன்மூலம், 39-வது பந்தில் அரைசதத்தை எட்டிய அவர் 18-வது ஓவரில் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கடைசி 2 ஓவர்களில் கேன் வில்லியம்சன் அதிரடி காட்ட அந்த அணி 150 ரன்களைக் கடந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.
வில்லியம்சன் 12 பந்துகளில் 22 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பிரியம் கர்க் 8 பந்துகளில் 15 ரன்களுக்கு கடைசி பந்தில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் தரப்பில் தியாகி, ஆர்ச்சர், உனத்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.