பிரியாணி வாங்குவதற்காக 1.5 கி.மீ தொலைவுக்குக் காத்திருந்த மக்கள்..!! (VIDEO)

பெங்களூருவின் புறநகர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பிரியாணி வாங்குவதற்காக அதிகாலை 4 : 30 மணி முதல் 1.5 கி.மீ., தூரம் வரிசையில் நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள ஹோஸ்கேட் நகரில் தனியாருக்கு சொந்தமான பிரியாணி கடை ஒன்று உள்ளது.

கடந்த 22 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், புகழ் பெற்ற பிரியாணி கடை என்பதால், அப்பகுதியில் இக்கடையில் கூட்டம் அதிகம் கூடும்.

அதுவும் வார விடுமுறை நாட்களில் கூட்டத்தை சமாளிக்க ஆயிரக்கணக்கான கிலோ கணக்கில் பிரியாணி தயார் செய்யப்படும்.

கடை திறந்த சில மணி நேரங்களிலேயே பல ஆயிரக்கணக்கான கிலோ பிரியாணி விற்று தீர்ந்துவிடும். 

இன்று (அக்., 11) வார விடுமுறை நாள் என்பதால், அதிகாலை முதலே ஏராளமான மக்கள் கடை முன் குவிய துவங்கினர்.

மாஸ்க் அணிந்தபடி வரிசையில் நிற்க துவங்கினர்.

சுமார் 1.5 கி.மீ., தூரம் காத்திருந்து பிரியாணி வாங்கி சாப்பிட்டு சென்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே