கொரோனா வைரஸ்க்கு மதுரையில் சிறப்பு வார்டு

தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் 8 படுக்கைகளுடன் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் சீனாவில் வேகமாக பரவி நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 8 படுக்கைகளுடன் தனித்தனி அறைகள் கொண்ட கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவை, மருத்துவமனை முதல்வர் சங்குமணி தொடங்கிவைத்தார்.

இங்கு கொரொனா வைரஸ் அறிகுறிகளை கண்டறியும் கருவிகளுடன், இரு நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவகுழுவினர் 24மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே