சென்னையில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்திலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியாக சென்னை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது;
அத்துடன் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அவரவர் வசிக்கும் இடங்களுக்கே சென்று உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும்.
அதேபோல் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் மாஸ்க், சானிடைசர், 250 கிராம் கிருமி நாசினி படவுர் வழங்கப்படும்.
அத்துடன் சென்னையில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.