#CauveryDelta : வேளாண் மண்டலமாக அறிவிப்பு – பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி

காவிரி பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

  • காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்.
  • இதுதொடர்பாக சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும்.
  • விவசாயிகள் படும் துயரத்தை கவனத்தில் கொண்டு இதை நான் அறிவிக்கிறேன்.
  • காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது.
  • விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு கொண்டு வராது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பா.ம.க.வின் 10 அம்சக் கோரிக்கைகளில் முதன்மையானதை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றியும், பாராட்டுகளும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே