பஞ்சாபில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மே 3ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
சில மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் எனக்கூறியுள்ளன.
இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மாநில மக்களுக்கு வீடியோ மூலம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கொரோனா அச்சுறுத்தலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்படுகிறது.
அதேநேரத்தில் காலை 7 மணி முதல் காலை 11 மணிவரை தளர்வுகள் இருக்கும் இந்த நேரத்தில், அத்யவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் வரலாம்.
அதேநேரத்தில் கடைகளும் திறக்க அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது வரை 322 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர்.