அதிமுக ஆட்சியை இந்து விரோத அரசாக சித்தரிக்க, சில அரசு அதிகாரிகள் முயற்சி : ஹெச்.ராஜா

கோவில் நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என கேள்வி எழுப்பியுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதே தண்ட செலவு  என கூறியுள்ளார்.

சென்னை தியாகராயநகரிலுள்ள பாஜக அலுவலகத்தில், மாநில மைய குழு கூட்டம், தேசிய பொது செயலாளர் முரளிதர ராவ் தலைமையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, 600 ஏக்கர் கோவில் நிலத்தை அங்கு வசிப்பவர்களுக்கு தமிழக அரசு வழங்க இருப்பது கண்டிக்கதக்கது என்றார்.

மேலும் கோவில் நிலங்களில் தான் வீடில்லாதவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டுமா என்றும், புறம்போக்கு நிலங்களில் கொடுக்கலாமே என்றும் அவர் கூறினார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே