வேதாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ மா.மீனாட்சிசுந்தரம் காலமானார்..!!

வேதாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ மா.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ மா.மீனாட்சி சுந்தரம்.

இவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்படவே திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்று இன்று அவர் காலமானார்.

இவர் மூன்றுமுறை வேதாரண்யம் எம்எல்ஏவாக பதவிவகித்தவர். மேலும் நாகை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.

மறைந்த மீனாட்சி சுந்தரத்திற்கு சென்னையில் கடந்த 15ஆம் தேதி நடந்த முப்பெரும் விழாவில் பெரியார் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே