அசைவப் பிரியரான ட்ரம்புக்கு சைவம் மட்டுமே வழங்க உத்தரவு

இந்தியா வரும் அமெரிக்க அதிபருக்கு பரிமாற உள்ள இந்திய உணவுகள் குறித்து கூறியுள்ளார் சமையல் வல்லுனர் சுரேஷ் கிருஷ்ணா.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார்.

பிறகு குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கும் பயணம் செய்ய இருக்கிறார் ட்ரம்ப்.

இதற்கான பணிகள் அகமதாபாத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகின்றன.

மேலும் குஜராத் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அவருக்கான உணவுகள் பிரபல நட்சத்திர உணவகம் ஒன்றிலிருந்து வரவழைக்கப்பட உள்ளது. 

இதற்கான உணவு பட்டியல் தயாராகியுள்ள நிலையில் சமையல் வல்லுனர் சுரேஷ் கிருஷ்ணா தலைமையில் இந்த உணவுகள் சமைக்கப்பட இருக்கின்றன.

அதில் சைவ உணவுகள் மட்டுமே தயாரிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

குறிப்பாக குஜராத்தின் பாரம்பரிய உணவு வகையான கவன் என்ற உணவு முக்கிய இடம் வகிக்கிறது.

கடலை மாவு மற்றும் தானியங்களின் மாவை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இதுதவிர குஜராத் இஞ்சி டீ, தானிய பிஸ்கட்டுகள், சோள சமோசா உள்ளிட்ட உணவு வகைகள் அங்கீகரிப்பட்டுள்ளது என சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.

பீட்ஸா, சாக்லெட், மில்க் ஷேக், கடல் உணவுகள், உருளைக் கிழங்கு சிப்ஸ் ஆகியவை ட்ரம்ப்பின் விருப்பப் பட்டியலில் உள்ள உணவுகள் ஆகும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே