நிர்பயா என்ற சகோதரியை டில்லியில் கற்பழித்து அவளது பிறப்புப்புறுப்பில் இரும்பு கம்பியை ஏற்றி குப்பையில் வீசிச்சென்றார்கள்.
ஆனால் கற்பழித்தவர் மேஜர் இல்லை என்ற காரணத்தால் ஜூவனைல் ஆக்ட் மூலம் கைது செய்து
அவருக்கு சிறிது காலம் மைனர் ஜெயிலில் நல்ல சத்துணவு கொடுத்து விட்டு அவர் பிழைக்க தையல் மிசின் மற்றும் பத்தாயிரம் ரூபாய் தரப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
இது போன்ற சிறப்பான சட்டங்கள் தான் நம் நாட்டின் பெருமையை பரணியெங்கும் எடுத்தியம்புகின்றன.
ஒருவனுக்கு ஒரு பெண்ணை கற்பழிக்க குறி எழும்புகிறது என்றால் அவன் மேஜராகி விடுகிறான் என்று அர்த்தம் இல்லையா..?
அந்த பெண்ணுக்கு மதுபானத்தில் தூக்க மருந்து கொடுத்து கற்பழிக்கிறான் என்றால் அவன் சுயசிந்தனையில் தானே அதை செய்கிறான்.
மேலும் எவிடெண்ஸ் இருக்கக்கூடாது என்று பெட்ரோல் ஊத்திக்கொலை செய்கிறார்களே..
இது சுயசிந்தனை இன்றி செய்யும் மைனர் மனோபாவமா???
குறி எழும்பாத யாராலும் கற்பழிக்க முடியாது.
மேலும் ஒரு பெண்ணால் குறி எழும்பாத ஆணை பலவந்தப்படுத்தி கற்பழிக்கச்செய்ய முடியாது.
ஆனாலும் நமது சட்டம் என்ன சொல்கிறது ?
18 ஆண்டுகள் ஆனால் தான் அவர் மேஜராகிறார்
அப்போது வரை அவர் செய்யும் கற்பழிப்பு / கொலை / கொள்ளைகளுக்கு அவர் காரணமில்லை.
நமது சட்டமே “மைனர்” கூலிப்படைகளை
உருவாக்குகிறது.
அட்வான்ஸ் புக்கிங்கில் ரேப் செய்யும் மைனர் குஞ்சுகளை உருவாக்கி அழகு பார்க்கிறது.
கெடுத்து குட்டிச்சுவராக்கியனுக்கே அவனை திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த பழைய சினிமா பஞ்சாயத்து முறைகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ???
நான் மீண்டும் இதே கேள்வியை தான் கேட்கிறேன்.
ஒருவனுக்கு ஒரு பெண்ணை கற்பழிக்க குறி எழும்புகிறது என்றால் அவன் மேஜராகி விடுகிறான் என்று அர்த்தம் இல்லையா..?
ஒருவன் மற்றவரை கூலிக்காக கொலை செய்ய கத்தி தூக்குகிறான் என்றால் அவன் குற்றவாளி இல்லையா?
ஏன் இதெல்லாம் கேக்குறேன்னா
டாக்டர் ப்ரியங்கா கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கிலும் கொலையாளிகள்ள ரெண்டு பேர் மைனர் மாதிரி தெரியிறானுங்க..
முக நூல் கூட 13 வயது என்பதை அக்கவுண்ட் ஓபன் செய்ய நிர்ணயிக்கிறது. நானும் அதையே தான் ஆமோதிக்கிறேன்
கிரிமினல் குற்றங்களில் மைனர்க்கான வயது வரம்புதனை 13 என்று ஆக்கலாம். பதினைந்துக்காவது குறைக்க வேண்டும்.
இதை நமது நாட்டு சட்டம் இயற்றுவோர் கட்டாயம் செயல்படுத்த வேண்டும்.
வீட்டுல அடிச்சு வளர்க்கலனா?
நாடு தான் அடிச்சு வளர்க்கணும்
அப்பன்ட்ட அடிவாங்காத புள்ள
வாத்தியார்ட்ட அடிவாங்குமாம்
வாத்தியார்ட்ட அடிவாங்காத புள்ள
லாக்கப்ல போலீஸ்காரர் கிட்ட அடிவாங்குமாம்
கிரிமினல் குற்றங்களுக்கான வயது வரம்பை 13 ஆகக் குறைக்க வேண்டும், குறைந்தபட்சம் கற்பழிப்பு கொலைக்கு மட்டுமாவது இதை செய்ய வேண்டும். Please, Make Changes in Juvenile Act.
Article Source : FB