போயஸ் கார்டனில் நடைபெற்ற நடிகர் தனுஷின் புதிய வீடு பூமி பூஜையில் ரஜினி உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நடிகர் தனுஷ் தற்போது மிகப்பெரிய உயரத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் என்ற போர்வையில் சிலர் அவரை மூட நினைத்த நிலையில் தனது அசாத்திய திறமையால் தனக்கென தனி இடத்தை அவர் பெற்றுள்ளார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அசுரன் தனுஷுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய பாராட்டை பெற்று தந்தது. 

தற்போது நடிகர் தனுஷ் ஜகமே தந்திரம், கர்ணன், அந்த்ரங்கி ரே, டி43 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஹாலிவுட்டிலும் தி கிரே மேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை போயஸ்கார்டனில் ஜெயலலிதா இல்லம் அருகே ரஜினி மருமகன் தனுஷ் வீடு கட்டுகிறார். போயஸ் கார்டனில் நடந்த தனுஷின் புதிய இல்ல பூமி பூஜையில் ரஜினிகாந்த், மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

கடந்த டிசம்பர் மாதமே நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் ரூ.22 கோடிக்கு வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே