திருநங்கையாவதற்கு முன்பு ஆணாக சீரியல்களில் நடித்துள்ள ஷகிலாவின் மகள் மிளா!

ஷாகீலா சமீபத்தில் தனது மகள் மிளாவை தத்தெடுத்ததாக, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சியில் அறிவித்து, அவரை அறிமுகப்படுத்தினார்.

திருநங்கையாவதற்கு முன்பு ஷகீலாவின் மகள் மிளா சீரியல்களில் ஆண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது தெரிய வந்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ஷகீலா, கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்துள்ளார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக மலையாள கரையோரம் கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

90-களில் பல மென்மையான ஆபாச படங்களில் நடித்தார். இவையனைத்தும் மலையாளத்தில் வெளியானதால், அங்கு அவருக்கு ரசிகர்கள் ஆதரவு பெருகியது. பின்னர் 2002-ம் ஆண்டு இதுபோன்ற கவர்ச்சி படங்களில் தான் இனி நடிக்கப் போவதில்லை என்று அறிவித்த அவர், குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார்.

இந்நிலையில் ஷாகீலா சமீபத்தில் தனது மகள் மிளாவை தத்தெடுத்ததாக, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சியில் அறிவித்து, அவரை அறிமுகப்படுத்தினார். ஆடை வடிவமைப்பாளரான மிளா அதன் பின்னர் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சமீபத்தில் பிரபலமடைந்தார்.

மிளா தனது ஆரம்ப நாட்களில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘தியாகம்’ மற்றும் ‘மருதாணி’ ஆகிய சீரியல்களில் ஆணாக நடித்துள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர் அவர் திருநங்கையாக மாறி, ஷகீலாவால் தத்தெடுக்கப்பட்டார். தங்கள் வாழ்க்கை போராட்டத்தில் ஷகீலாவும், மிளாவும் ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே