மண் தரையில் தூங்கிய சிம்பு – வைரலாகும் படம்!

மாநாடு படப்பிடிப்பு தளத்தில் மண் தரையில் நடிகர் சிம்பு படுத்துத் தூங்கிய புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாநாடு படப்பிடிப்பு தளத்தில் மண் தரையில் நடிகர் சிம்பு படுத்துத் தூங்கிய புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அவரின் பாடல்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இதன் படப்பிடிப்பு முன்பே தொடங்கிவிட்டாலும், கொரோனா காரணமாக மற்ற படங்களைப் போல், இதன் ஷூட்டிங்கும் பாதிக்கப்பட்டது. பின்னர் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், மீண்டும் வேலைகள் தொடரப்பட்டது. அரசியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே