மாநாடு படத்தில் இணைந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

மாநாடு படத்தில் சிம்புவுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன.

மாநாடு படத்தில் சிம்புவுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்புவுடன், விஜய் டிவி குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன. இதனால் அந்தப் படத்தில் புகழ் நடிப்பது உறுதியாகியிருக்கிறது என்றாலும், இது குறித்து மாநாடு படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. தவிர புகழ் ஏற்கனவே அஜித்தின் வலிமை, விஜய் சேதுபதியின் 46-வது படம் ஆகியவற்றில் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மாநாடு மாநாடு படத்தில் மண் தரையில் சிம்பு படுத்துத் தூங்கும் புகைப்படங்களும் வெளியாகி, அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே