சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா

கர்நாடக இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார்.

அந்த மாநிலத்தில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற  இடைத்தேர்தலில்  காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வென்று உள்ளது.

அந்த கட்சியின் வசம் இருந்த 10 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், கர்நாடக இடைத்தேர்தல் தோல்வியின் எதிரொலியாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதே போல தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து தினேஷ் குண்டு ராவ் விலகி உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே