அமமுக பொருளாளராக மனோகரன் நியமனம் – டிடிவி தினகரன் அறிவிப்பு..!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர், கழக பொருளாளர், கழக தலைமை நிலையச் செயலாளர், கழக தேர்தல் பிரிவு செயலாளர் ஆகிய பொறுப்புகளுக்கு கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

கழக துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சரும், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான செந்தமிழன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஏற்கனவே கழக துணைப் பொதுச்செயலாளர்களாக செயலாற்றி வரும் பழனியப்பன் (முன்னாள் அமைச்சர்) மற்றும் ரெங்கசாமி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார்.

அதேபோல கழக பொருளாளராக, முன்னாள் அரசு கொறடாவும், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கழக தலைமை நிலையச் செயலாளராக, முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளருமான சண்முகவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், ஏற்கனவே கழக தலைமை நிலையச்செயலாளராக செயலாற்றி வரும் K.K.உமாதேவன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) அவர்களுடன் இணைந்து பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.

கழக தேர்தல் பிரிவு செயலாளராக, ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் N.G.பார்த்திபன் Ex.MLA., நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், ஏற்கனவே கழக தேர்தல் பிரிவு செயலாளராக செயலாற்றி வரும் S.V.S.P.மாணிக்கராஜாவுடன் (கயத்தாறு ஒன்றியக் குழு பெருந்தலைவர்) இணைந்து பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிர்வாகிகளில் இதுவரை கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்த .R.மனோகரன், கழக தேர்தல் பிரிவு செயலாளர் பொறுப்பிலிருந்த G.செந்தமிழன், கழக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்த C.சண்முகவேலு அந்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என டிடிவி தினகரன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே