கர்நாடகாவில் நடைபெற்ற இடைத் தேர்தலில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
கர்நாடகாவில் ஹிரேகெருர், ராணிபென்னூர், யெல்லாபூர், சிக்கபெல்லாபூர், விஜயநகரா, மகாலட்சுமி லேஅவுட் உள்ளிட்ட 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது.
அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
இதில் காக்வாட், சிக்கபெல்லாபூர், கே.ஆர்.பேட்டா , எல்லப்பூர், கோகாக்,ஹெரிகுருர், விஜயநகர், ரானிபென்னூர் உள்ளிட்ட 12 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு ஏற்கனவே 105 உறுப்பினர்கள் உள்ளனர்.
காலியாக உள்ள 17 தொகுதிகளில் வழக்கு காரணமாக 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவில்லை.
இதுவரை 8 தொகுதிகளை கைப்பற்றியதன் மூலம் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.