‘தல’ அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா? : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி!

நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால் ரஜினி, கமல், விஜய்யை விட முன்னோடியாக திகழ்வார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சூசகமாக தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினி ஒரு ஆன்மிகவாதி என்றும் அவர் சொல்வது போன்று நாளை என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது என்று கூறினார்.

மேலும் பாட்ஷா திரைப்படம் வெளியானபோது கட்சி ஆரம்பித்திருந்தால் ரஜினி ஆட்சியை பிடித்திருப்பார் எனவும் தற்போது காலம் தாழ்த்திவிட்டார் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

ரஜினி, கமல், விஜய் ஆகியோர் கூட்டணி அமைத்தால் அதனை எதிர்கொள்ள அதிமுக பலம்வாய்ந்த கூட்டணியை அமைக்கும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

ரஜினி, கமல், விஜய் தான் அரசியலில் முன்னோடியாக திகழ்வார்களா? அஜித் அரசியலுக்கு வந்தால் முன்னோடியாக திகழ மாட்டரா?? எனவும் கேள்வி எழுப்பினார்.  

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே