கல்வியில் சிறந்த தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை என்ற மதயானை புகுந்து நாசம் செய்கிறது – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

புதிய கல்விக்கொள்கை குறித்து திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி கருத்து மேடை நடைபெற்றது.

இதில், கல்வியாளர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காணொலி கருத்து மேடையில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கை என்ற மத யானை புகுந்து நாசம் செய்கிறது.

புதிய கல்வி கொள்கை வேத கலாச்சாரத்தை திணப்பதாகவும், கல்விக்கு மதச்சாயம் பூசப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் பாதியில் கல்வியை நிறுத்தும் சூழல் உருவாகும்.

அனைவருக்கும் கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்காத நிலை ஏற்படும்.

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுத்து நிராகரிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது அண்ணாவிற்கு செய்யும் துரோகம். 

புதிய கல்விக் கொள்கை மோசமானது என நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இன்னும் 10 ஆண்டுகளில் கல்வி சிலருக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலை ஆகிவிடும்

இந்தியாவின் பலமே இளைஞர் சக்திதான் என்பார்கள், அதை நாம் இழக்கும் நிலை ஏற்படும்.

மக்களை ஏமாற்றுவமதாக நினைத்துக்கொண்டு பிரதமர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார்.

தமிழகத்தில் கல்வி ஒளியை அணைக்க விடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே