நாங்குநேரி இடைத் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
சங்கரசுப்பிரமணியம் என்ற சுயேட்சை வேட்பாளர் தாக்கல் செய்த மனுவில், நாங்குநேரி தொகுதியில் ஆளுங்கட்சியினர் முகாமிட்டு பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாகவும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் வரிசைப்படி இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மனு விசாரணைக்கு வந்தபோது அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தேர்தலை முறையாக நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் உரிய முன்னேற்பாடுகளைச் செய்யும் எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.