தேர்தல் நடைபெற்று வரும் மேற்குவங்கத்தில் துப்பாக்கிச்சூடு..!!

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக போட்டியிடுகின்றன.

மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளுள் 5 மாவட்டங்களில் இருக்கும் 30 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலையொட்டி அந்த 5 மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 37% வாக்குப்பதிவு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி 7.72% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், முதற்கட்ட தேர்தல் நடந்துவரும் மேற்கு வங்க மாநிலத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதில் 2 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

பகவான் பூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கும் முன் வாக்காளர்களை சிலர் அச்சுறுத்த முயன்றதாகவும், அவர்களை தடுத்த போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 வீரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் பாஜக புகாரளித்துள்ளது.

மேலும், ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருடன் சிலர் சேர்ந்து வாக்காளர்களை அச்சுறுத்தியதாக எதிர்க்கட்சியான பாஜக புகாரில் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே