ரயில்வே சொத்துகளை சேதப்படுத்துவோரை கண்ட‌தும் சுட்டுத்தள்‌ளவும் – அமைச்சர் சுரேஷ் அங்கடி

ரயில்வே உட்பட பொது சொத்துக்களை சேதப்படுத்துவோரை சுட்டுத்தள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அரசியல் கட்சிகளும், மாணவர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் 400 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தி வருவதாகவும்; வன்முறையில் ஈடுபட்டதால் தான் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி, ரயில்வே உட்பட பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் அவர்களை துப்பாக்கியால் சுட்டுத்தள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே