மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டி மாணவர்கள் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு!

ரக்க்ஷா பந்தன் தினத்தையொட்டி சுற்றுச்சூழலை காத்திடும் வகையில் மாணவர்கள் மரங்களுக்கு ராக்கி கட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ரக்க்ஷா பந்தன் தினத்தில் சகோதரத்துவத்தை வளர்க்கும் வகையில் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டப்படுகிறது.

அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியில் மரங்களை வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரங்களுக்கு ராக்கி கயிற்றை கட்டி வித்தியாசமான முறையில் மாணவர்கள் ரக்க்ஷா பந்தனை கொண்டாடினர்.

மரங்களை வளர்ப்போம், சுற்றுச்சூழலை காப்போம், என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்கள் மரங்களுக்கு ராக்கி கட்டினர்.

இது குறித்து பேசிய மாணவர் ஒருவர், மரங்களை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பாக இந்த ரக்க்ஷா பந்தனை கருதுகிறோம்.

அதற்காக மரங்களுக்கு ராக்கி கயிற்றை கட்டி மரங்களால் அடையும் பயனை விளக்குகிறோம். மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மரங்களை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்று கூறினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே