இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றம் – புவனேஷ்வர் குமாருக்கு பதில் சர்துல் தாகூர்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக புவனேஸ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

ஏற்கனவே டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

சென்னையில் நாளை நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியை வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகிறது. 

இந்நிலையில் டி20 போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் காயமடைந்தார்.

தொடர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

முன்னதாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் இடம்பெற்றுள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே