ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளுக்கான, இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற, 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயமடைந்தார்.

இதையடுத்து போட்டியில் இருந்து பாதியிலேயே, மைதானத்தை விட்டு அவர் வெளியேறினார்.

இந்நிலையில், உமேஷ் யாதவ்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி, 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து உமேஷ் யாதவ் விலகியுள்ளார்.

இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தற்போது தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இன்று வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டி-20 தொடரில், சிறப்பாக பந்துவீசி தனது திறமையை வெளிப்படுத்தியவர் நடராஜன், என்பது குறிப்பிடத்தக்கது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே