இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்தது. இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 78,512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 36,21,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு 7,81,975 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் சதவிகிதம் 21.60% ஆக உள்ளது. இதுவரை 64,469 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 971 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் சதவிகிதம் 1.79% ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 27,74,801 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கடந்த 24 மணிநேரத்தில் 60,868 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் சதவிகிதம் 76.61% ஆக உள்ளது.

கொரோனா மாதிரிகள் பரிசோதனை:

இந்தியாவில் நேற்று மட்டும் ஒரே நாளில், 8,46,278 பேருக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை மொத்தம் 4,23,07,914 கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே