கடுமையாக சரிந்தது சென்செக்ஸ்….

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை படுமோசமாக சரிந்து வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை பங்குச்சந்தை தொடங்கியவுடனே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2600 புள்ளிகள் வரை சரிவு ஏற்பட்டது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 750 புள்ளிகள் வரை சரிவை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 8 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சற்றுமுன் வரை சென்செக்ஸ் 2204 புள்ளிகள் வரை சரிந்து 27702 என்ற நிலையிலும், நிப்டி 634 புள்ளிகள் சரிந்து 8115 என்ற நிலையிலும் உள்ளது. 

அதேபோல் கமாடிட்டி சந்தையில் தங்கம் வெள்ளி தவிர கச்சா எண்ணெய் உள்பட மற்ற அனைத்து பொருட்களும் சரிவை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 76.19ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *