கொரோனா நிலைமையை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை – பிரதமர் வேதனை

கொரோனா நிலைமையை இன்னும் மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது.

இதுவரை உலகம் முழுவதும் 3,36,075 பேர் பாதிக்கப்பட்டு, 14,613 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97, 636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடல், ரயில் சேவை ரத்து, மாநில எல்லைகளில் பேருந்துகள் நிறுத்தம், வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன.

எனினும் பெரும்பாலான இடங்களில் மக்கள் நடமாட்டம் இன்னமும் காணப்படுவதாகவும், மக்கள் ஒன்றுகூடும் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால் தான் இத்தாலி இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் கொரோனா நிலைமையை இன்னும் மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், அரசு கூறியுள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி உங்களையும் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த மாநில அரசுகளை கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே