பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் புறப்பட்டார்.

காலை 10.35 மணிக்கு சென்னை வருகை தரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிலையில் இன்று சென்னைக்கு வரவிருப்பதை அடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தமிழில் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

நாளை நான் சென்னையில் இருப்பேன் என்று அவர் பதிவு செய்துள்ள வீட்டுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் டுவிட்டில் கூறப்பட்டுள்ளதாவது: பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். 

நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே