புதுச்சேரி அரசியலில் பரபரப்பை கிளப்பி வரும் காங்கிரஸின் மல்லாடி கிருஷ்ணாராவ் தமது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திடீரென எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை கிளப்பியவர் மல்லாடி கிருஷ்ணாராவ்.

புதுச்சேரி நிர்வாகத்துக்குட்பட்ட ஏனாம் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் மல்லாடி கிருஷ்ணாராவ்.

புதுச்சேரி அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஆந்திரா அரசியலில் களம் காணப் போகிறார் மல்லாடி கிருஷ்ணாராவ் என செய்திகள் வெளியாகின.

ஆனால் இதனை அவர் மறுத்திருந்தார்.

மேலும் புதுச்சேரி அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன்; வரும் சட்டசபை தேர்தலில் நானோ என் குடும்பத்தினரோ போட்டியிடமாட்டோம் எனவும் அறிவித்திருந்த மல்லாடி கிருஷ்ணாராவ் அண்மையில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

ஆனால் இந்த ராஜினாமாவை முதல்வர் நாராயணசாமி ஏற்கவில்லை.

இந்த நிலையில் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு அனுப்பி உள்ளார் மல்லாடி கிருஷ்ணாராவ்.

புதுவையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அமைச்சர் நமச்சிவாயம், அவரது ஆதரவு எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர்.

இப்போது மல்லாடி கிருஷ்ணாராவ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே